கடன்.
கேட்ட போதெல்லாம்
கிடைத்து
கேட்காதபோதும்
கிடைத்தது
திரும்பிக்கொடுக்கவில்லை
மீண்டும் கேட்டேன்
கடனாய் ரூபாய்கள்...
நாட்டுப்பாட்டு
கும்மிப்பாட்டு
குத்துப்பாட்டு
எந்தப்பாட்டும் கேட்காத
இலக்கிய வார்த்தைகள்
கேட்கும்போதே
ஆகா...!!!என்ன இனிமை...
எனக்கும் சற்று
மனத்தாங்கல்தான்
நான்பட்ட கடனுக்கு
பாவம் கொள்ளுத்தாத்தா
பரம்பரைவரை
பாட்டு வாங்குகிறார்...
கடன்தானே !!!
நாளை தருவேன்
வீராப்பாய் அள்ளிவிட்டேன்
வீர வசனங்களை
நாளையும் இன்னும்மெரு நாளை
வரும் என்ற நம்பிக்கையில்.