தீயவை தீயிலிடு!!

ஒரு எண்ணம் ஒரு துளி
துளித்துளியாய் பெருகும்
கனவோடு கற்பனையும் சேர்க்கும்
நல்லவை வளர விடு
தீயவை தீயிலிடு
நல்லவை எல்லாம் திரட்டி
தீயவை தீய்துவிடு
நன்மைகள் கரம் கோர்த்தால்
தீயவைகள் கரமிழக்கும்
நன்மைகளின் கூட்டோடு
தீமைகளை அழித்துவிடு
நன்மைகள் வளர வளர
தீமைகள் நடுங்கி ஒடுங்கிப்போகும்
நல்லவைகள் நிகழ நிகழ
நன்மைகள் தினம் பெருகும்
வளரும் நன்மைகளால்
மனிதம் தழைக்கும்
நாளைய உலகம் நல்வழியில் செல்லும்..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (11-Sep-12, 7:32 am)
பார்வை : 219

மேலே