மனம் கலங்கிய தருணத்தில் என் உள்ளத்துள் எழுந்த குமுறல்கள் !

அன்புக் கடலில் அழகாய் நீந்தித்திரிந்த நான்
ஆழ்ந்த சூழலில் அமைதியிழந்து நிற்பதேன் ?
இன்பம் நிறைந்த என் வாழ்வில்
ஈடில்லாத் துன்பம் நிறைந்து காட்சியளிப்பதேன் ?
உன்னதமான வாழ்வை ரசித்து வாழ்ந்த நான்
ஊன்உறக்கமின்றி உடல்சோர்வாய் நினைப்பதேன்?
என் கண்கள் வெளிச்சத்தில் திறந்திருந்தும்
ஏதுமில்லாஇருளாய் சூழ்ந்துள்ளதை உணர்வதேன்?
ஐயகோ என்னுள் ஏனிந்த மாற்றங்கள் சாபங்களாய்!
ஒரு லட்சம் கேள்விகள் ஒன்றின்மேல் ஒன்றாய்
ஓயாமல் என்னுள் மாறிமாறி எழுவதேன் ?
ஓளடதம் உட்கொண்டு தேற்ற இது என்ன பினியோ
அ/தே ஏனிந்த நிலை என்னுள் என்னவாயிற்று …
உயிரெலுத்துக்களில் உணர்வை வெளிப்படுத்தி நான் உணர்வில்லாத ஜடமாய் இருக்கிறேன் ....

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (11-Sep-12, 4:29 pm)
பார்வை : 289

மேலே