தேடல்

இரு கருவிழிகள்
பேசும் போது
இமைகள் கூட
இமைக்க மறுக்கிறது
என்னிடம்
மௌனங்கள்
பேசும் போது
வார்த்தைகள் தயங்கி நிற்கின்றன
என்னிடம்
ஆனால்
மனசும் மனசும்
பேசும் போது மட்டும்
என்னை அறியாமல்
தொலைந்த
என் சுகமான உணர்வினை
நான் தேடுகிறேன்
புரியாத தேடலில்
புது கவிதை வரிகளில்
உன் நினைவுகளுடன்
என்றென்றும் !

எழுதியவர் : (13-Sep-12, 11:39 pm)
சேர்த்தது : nandhinibalasubramaniam
Tanglish : thedal
பார்வை : 119

மேலே