இழி பிறவிகள்

பிச்சைக்காரனுக்கும் ஒரு கொள்கை உண்டு,
தன் மாமியாரின் தெருவில் பிச்சை எடுக்க மாட்டான்,
அவனது கவுரவ நிமித்தமாகவும் இருக்கலாம்,
அவர்கள் வயிற்றில் அடிக்க விரும்பாமையும்.

ஆனால் இங்கே பல ஜென்மங்கள்!
காருக்காகவும், பங்களாவுக்காகவும் கல்யாணம்,
பொன்னுக்கும், பொருளுக்கும் தான் திருமணம்
என்று வெட்கமில்லாமல் அலைகின்றனவே!

படித்தவன் படிக்காதவன் பாகுபாடில்லையே!
ஏழை பணக்காரன் வித்யாசமில்லையே!
அரசு அதிகாரிக்கு அடுக்குமாடி வேண்டுமாம்...
கூலி வேலைக்காரன் ஸ்கூட்டி கேட்கிறான்.

இவர்களும் பிச்சைக்காரர்களும் ஒன்றா?
சொன்னால் கோபப்படுவார்கள் பிச்சைக்காரர்கள்
இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?
இழிப்பிறவிகள் என்று அழைக்கலாமே.

எழுதியவர் : அந்தோணி முத்து (16-Sep-12, 6:08 pm)
சேர்த்தது : Anthony Muthu
பார்வை : 261

மேலே