உனைப் போல் ஆகுமோ..?!

கொஞ்சித் தமிழ்பேசும்
உந்தன் மொழியில்
காலம் தந்த என்
காயங்கள் நலமாகும்...!

உன்னைப் பார்த்திருந்தால்
உன்னில் வாழ்ந்திருந்தால்
துன்பம் உள்ளபோதும்
வாழ்க்கை சுகமாகும்...!

உன்னைப் போல் வேறு தெய்வம்
நேரில் வந்து பேசுமோ
நேரில் பேசிச் சென்றாலும்
அது,
உனைப் போல் ஆகுமோ..?!

எழுதியவர் : சுதந்திரா (13-Oct-10, 8:04 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 402

மேலே