முழுதும் கற்பனையோ???

கண்ணுக்கெட்டியதூரம்வரை
பச்சைப்பசேல் மயக்கும் பசுமை
அழகிய நெல்வயல்களின் அணிவகுப்பு!
எங்கெங்கிலும் காற்றில் கலந்துவரும்
வழியெங்கிலும் மகிழ்ச்சி தரும்
நாசிதொடும் நெற்பயிரின் வாசம்!
நாற்றுநடும் பெண்கள் பாட்டும்
ஏரோட்டும் ஆண்கள் வீச்சும்
வழிநெடுகிலும் காதில் வந்தாடும்!
நிரம்பிதளும்பும் நெடும் கால்வாய்களும்
கரைதொடும் பெரும் குளத்துநீரும்
கற்றில் குளுமை சேர்க்கும்!
உடலும் மனதும் இன்பம் துள்ளும்!
எல்லாமும் இனி கற்பனையோ!
நடந்த நிகழ்வுகள்யாவும் கற்பனையோ!
காவிரி பாய்ந்தெங்கிலும் நீர்சேர்க்கும்
நீர்நிலைகளெல்லாம் நிறைந்து தளும்பும்
இனியிது முழுதும் கற்பனையோ?..............