வால்ட் மார்ட்
பாலாடை முதல்
படை வரை
எல்லாம் மலிவு விலை
சிறு வணிகருக்கு
பாடை கடும் வரை
விவசாயி முதுகெலும்பு
வணிகன் இடுப்பெலும்பு
முதுகெலும்பு மெலிந்து விட்டது
இடுப்பெலும்புக்கு
வால்ட் மார்ட் வெடி வந்துவிட்டது .
ஏற்கனவே செருப்பை BATAவிடமும்
அரிசியை சீனாவிடமும்
பிச்சை கேட்கிறோம் .
இனி கள்ளும் பாட்டிலில்
இந்திய சுதந்திரமும் பாக்கெட்டில்
அமெரிக்காவில் இலவச இணைப்பாக .
விழிதுகோல் விழிகள்
களவாடபடுகிறது தோழா .............