பூமி
மருண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேயாம்
மாயா என்றொரு நாட்காட்டியாம்
மாய விந்தை காட்டுதாம்
மார்கழி இருபத்தொன்று
இரண்டாயிரத்தி பன்னிரன்டாம்
நாட்காட்டி கணக்கை
இறுதியாய் முடிக்குதாம்
கதை கேட்டவைக்கு
கற்பனையில் பேரிடியாம்
உலகம் அழியப் போகுது
வானம் இடியப்போகுதாம்
நெருப்பில் படுக்கப் போகினம்
வானத்தில் பறக்கப்போகினமாம்
நடக்காத திருமணத்துக்கு
நேரம் பார்ப்பினமாம்
இறந்தவன் சாதகத்தில்
பலன் பார்ப்பினமாம்
சிங்கம் புளியைக் கொ ஞ்சுமாம்
சீறியநாகம் சிரிக்குமாம்
எல்லாம் ஏதோ ஒரு கணிப்பாம்
இழிச்சவாயள் வசதியாய் இருந்தால்
இதென்ன இன்னும் பல
வினோதங்கள் நடக்குமாம்