வே.ம.அருச்சுணன்

கவிதை: மொழி

( வே.ம.அருச்சுணன் –கிள்ளான் )



மொழியே விழிகள் என்பார்
மேலாய் அதனை நினைப்பார்
செழிப்பாய் வளர்ந்திட உழைப்பார்
சேயாய் நித்தம் காப்பார்….!

குயிலாய் தம்மொழி உரைப்பார்
கூடியே செம்மொழி ஊட்டுவார்
மயிலாய் உயிர்மொழி காண்பார்
மாசற்ற மொழிதனை வளர்ப்பார்…!

தமிழார் உரைப்பது தாய்மொழி
தரணியில் பிறந்தது தமிழ்மொழி
தமிழின் உயர்வில் கனிவுமொழி
தாக்கம் தந்திடும் இனியமொழி…!

முத்தமிழ் முழங்கவே நாட்டிலே
மூவினம் தந்திடும் ஆதரவிலே
எத்தகு இடரும் இங்கிலே
எளிதாய் முத்தமிழ் வளர்த்திடு….!

நம்பள்ளி சென்றே கற்றிடுக
தாய்மொழி அழியாது காத்திடுக
உம்பணி மொழிதனை உயர்த்திடுக
உண்ணத செந்தமிழை போற்றிடுக….!

நம்மொழி பெரிதென வாழ்த்திடு
நமதினம் வெற்றிக்கு உதவிடு
வம்பின்றி ஒன்றியே உழைத்திடு
வாழ்வோம் மொழியால் விழித்திடு…..!




--------முற்றியது----

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (26-Sep-12, 2:35 pm)
பார்வை : 163

மேலே