பெற்றதெல்லாம் பிள்ளை யில்லை
அந்த
அரங்கமே
அமைதியின்
மத்தியில்.!!!
இவனோ
இயற்கையின்
அந்தரங்கம் பற்றிப்
பேசப்
போகிறான!
பேசியப் பேச்சில்
அரங்கே அதிர்ந்து
போனது!
யார் இந்த
சிறுவன்?
குள்ளநரி
உயரமாய்
இருந்து கொண்டு
இவனின்
பேச்சில்
இமயமே
குள்ளமாகிப்
போனேதே!
சிட்டுக்குறுவிகளின்
சவப்பெட்டியாம்
செல்போன்!
என்று
குறட்டைவிடும்
மேகங்களைத்
தட்டி எழுப்பி
ஆரம்பிக்கிறான்
எங்கள் ஊர்,
நெகிழிமலைகளை
சுமக்கிறது!
எங்கள் ஊரை
நெகிழி மலைகள்
அமுக்கிறது!
பிளாஸ்டிக்கை
பயன்படுத்தக்கூடாது
என்று
சொல்லும் அரசாங்கம்
ஏன்
தயாரிப்பு
நிறுவனங்களை
தடை செய்யவில்லை!
என்று
ஏழாம்வகுப்பிலே
எட்டாம் அறிவு
கேள்வி
கேட்கிறான்!
நான்கு வழிச்சாலை
அமைப்பதாய்ச்
சொல்லி
ஏன்
அப்பாவி
மரங்களை
வெட்டுகிறீர்கள்
என்று
ஆவேசமாய்
கேட்கிறான்!
அன்று
நான்
போர்த்தியிருந்த
கம்பளியைத்
துக்கிக்கொண்டு
போன
காற்று,
இன்று
கொடியில் காயும்
கோவனத்தை
உலர்த்திவிட்டுப்
போகக்கூட
வரவில்லை யென்று
பறைசாற்றுகிறான்!
ஆற்றுப்படுகையை
தோண்டித்தோண்டி
பல்லாங்குழிகள்,
படுகுழிகள்
ஆகிப்போனது...
என்று
பட்டம்
வாங்காமலேயே
திட்டம் போடுகிறான்!
சிலேட்டுக்குச்சியை
தொட்டு
எழுதும்
கைகளில்
புகழின் உச்சியை
எழுதித்
தொட்டுவிட்டான்!
காரைக்குடியின்
கதிரவனாய்
தோன்றி விட்டான்!
இப்படியொரு
பிள்ளை
தனக்கும்
இல்லையே யென்று
தாய்மார்களை
ஏங்க வைத்து
விட்டான்!
ஆமாம்
தானும் மேடையேறி
தன்
தாய் தந்தையையும்
மேடையேற்றி
தான்
ஒரு பிள்ளை
என்பதை
நிரூபித்து விட்டான்!
ஏழாம் வகுப்பிலே
கல்லூரியில்
இடம்
வாங்கிவிட்டான்!
பெற்றோரின்
சுமையை இறக்கிவிட்டான்!
பள்ளிக்கும்
பெருமை சேர்த்து
படிக்கப்போகும்
கல்லூரிக்கும்
பெருமை சேர்த்து விட்டான்!
பெற்றதெல்லாம்
பிள்ளை யில்லை
பெற்றவனுக்கு
பெயர்சேர்ப்பவனே
பிள்ளை யென்று
சிறுமை ஒழித்துப்
பெரியவனாகிவிட்டான்!
. . . . . . . . . . . . . . . . . . . .
(இன்று
raj tv யின்"அகடவிகடம்"
என்ற நிகழ்ச்சியில்
ஒரு ஏழாம்வகுப்பு
சிறுவன்
மணிகண்டனின்
பேச்சாற்றல் தான்
இது)