நடைபிணங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
தூக்கக் கனவுகள் தற்கொலை செய்கின்றன
அதிகாலை நான்கு மணிக்கு
சைக்கிளை மிதித்து வேகமாய் ஒரு பயணம்
நல்லாசிரியரின் வீட்டிற்கு
sinஐ cos ஆல் வகுத்தால் என்ன?
sec ஆ,tan ஆ?
நேற்று படித்த நினைவுகளை மூளையில் தேடினேன்
கிடைத்தது விடை இல்லை அடி!
மரத்துப்போன உள்ளங்கையில் உணர்ச்சியில்லை!!
பயத்திலே முடிகிறது ஒவ்வொரு காலைவேளையும்
மீண்டும் ஒரு பயணம்...
ஏழெட்டு புத்தகங்களையும் சில ஏடுகளையும் தூக்கி
படம்,விளையாட்டு எதுவும் இல்லை
ஹைட்ரோகுளோரிக் தான் ஆட்சி செய்கிறது!!
காலாண்டு,அரையாண்டுத் தேர்வுகள்
மதிப்பெண் போட்டிக்கு மாற்றுப்பெயர்கள்
கணந்தோறும் வருகிறது ஆலோசனைகள்
புத்தகப் பக்கங்களில் கண்ணீர்த் துளிகள்!!
அம்மாவின் மடியில் படுத்திருக்க ஆசை!
அப்பாவின் கைபிடித்து நடக்க ஆசை!
ஒன்றுமே நடக்கவில்லை
வெறி பிடித்து மனணம் செய்தேன்
அட்டை முதல் அட்டை வரை
கல்வி நீதிபதிகளின் தீர்ப்பு வந்தது
மாநிலத்தில் முதலிடமாம்!!!
சிரித்தேன் உரக்கச் சிரித்தேன்
இன்னும் சத்தமாய், இன்னும் இன்னும் சத்தமாய்...........
சமூக முட்டாள்களை நினைத்து!!