அக்டோபர் - 2

மது விற்ப்பனையில்
மட்டற்ற சாதனை !
இந்நாளில் மட்டுமே
இயல்பையும் மீறி நடக்கும்........

கடைகள் அடைக்கப்பட்டாலும்
"கல்லா" கட்டுவதை - அந்த
கடவுளே வந்தாலும்
கலைக்க முடியாது ............

விலையேறி நின்றாலும்
வியாபாரம் நில்லாது ,
குடிமகனின் கும்மாளம்
குறைவாக செல்லாது ......................

கற்புக்கரசிகளின்
கற்பு - இந்நாளிலும்
கயவர்களால்
களவாடப் பட்டிருக்கும் ..............................

பகலிலேயே
பயணம் கொள்ள முடியா
பெண்களுக்கு ,
இரவில் மட்டும் வெளியே
இறங்கிவிட முடிவது சாத்தியமா ?

உண்ண
உணவின்றி
பசியால்
உயிரிழக்கும் - அந்த
உன்னத உயிர்
இன்று யாருடையதோ ?

உறங்க இடமின்றி
உயிர்வாழும் ஏழை - பலர்
திண்டாடலாம் ,
உடமைகளை ஒழித்து வைக்க
உறக்கம் தொலைத்து பலர்
உறவினர் வீடு சென்றின்று
மன்றாடலாம் ..... (வருமானவரி சோதனைகண்டு)

உடல் மறைக்க
ஒட்டுத்துணி இல்லாத
ஒருகூட்டமும் ,
ஆடம்பர உடைகளணிந்து
அலங்காரம் கொள்ளும்
ஒருகூட்டமும் - இன்றும்
ஒரே நாட்டில்............

கிழிந்த ஆடைதைக்க
திறனற்ற
ஒருகூட்டமும்
கிழித்தே ஆடைகட்டி
கிளுகிளுப்பூட்டும்
ஒரு கூட்டமும் - இன்றும்
ஒரே நாட்டில் .............................

வாய்மை வாக்கிழந்து
பொய்மை பொறுப்பேற்றுவிட்ட
இந்த தேசத்தில்
"வாய்மையே வெல்லும்" என்றால்
வாய் கொள்ளாத சிரிப்பு....


"இந்நாளில் பிறந்தமகான்"
இன்று இருந்திருந்தால்
இந்நாளே இறந்திருப்பார்
இந்நாட்டின் நிலைகண்டு ...................................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (2-Oct-12, 12:06 pm)
பார்வை : 458

மேலே