அலைபேசி

மனித குரல்களின் அதிர்வுகளை
அலையாய் காற்றில் அலையவிட்டாய்

கோபுரம் வழியே அத்தனையும்
உறிஞ்சி உதிர்த்து சொல்லிவிட்டாய்

எண்ணை அழுத்தி அலை அலையாய்
கூறிய எண்ணம் பலவன்றோ

செய்தி எனும் தீ யைத்தான்
எண்திசை அதிர உரைத்திட்டாய்

சொல்லிய சொற்கள் அனைத்துமிங்கு
எவரின் மனதை சுட்ட சுடு சொற்களோ

மூளையை சுட்டது என உரைக்கும்
முகமது அறியா மருத்துவர் கூட்டம்

கேட்பான் வைத்த காதுகளும் கூட
கெட்டுப்போனது நாளொன்றில்

நயமாய் நீயும் விலகிவிட்டால்
நல்லது என்றும் உமக்காமே !

தொலைவில் உள்ள உறவுகளை -எப்படி
தொடர்பு கொள்வது இனியொரு நாள்

தொடர்ந்து வந்த பழக்கமதை
துண்டாக்கிவிடுதல் முறையாமோ !

கம்பி தொலைபேசி மறந்தாயோ
குறைவான அதிர்வலை கொண்டது அதுவே


கத்தி கூறி சொல்கின்றேன்
இக்கணத்தே நீயும் கேட்பாயோ ?

கேட்கும் திறனை இழந்துவிட்டு
காதுகள் இருந்தும் பயனென்ன ?

ஐம்பொறி யொன்றில் கடைப் பொறிக்கு
எலிப் பொறி வைத்தல் சரியாமோ!

இயந்திர வாழ்க்கை நடுவினிலே
பாழடைந்து போன நல் நிகழ்வுகளை

தூசி தட்டி எடுத்திடுங்கள் -என்றும்
துயரமில்லை உம் வாழ்வில்

ஆரோக்கியமான வாழ்வை வாழ
ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்

அறிவியல் கண்டுபிடிப்பில் எந்நாளும்
தீமையும் என்றும் ஒளிந்திருக்கும்

அன்னப் பறவை போல் நாமிங்கே
தீமை விலக்கி நன்மை எடுக்கலாமிங்கே !

எழுதியவர் : சுகந்த் (5-Oct-12, 7:47 pm)
பார்வை : 4489

மேலே