கிறுக்கனின் கிறுக்கல்கள் - 4

"""""""""""""""" இன்று """"""""""""""""""""""
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

காதல் !
காமத்தை மறைக்க
கண்ணியப் பூட்டு .


காமம் !
கட்டிலில் அரங்கேறியவை
காணுமிட மெல்லாம் .


உண்மை !
உணர்ந்து வாழ்ந்தால்
உணவுக்கு வழியில்லை .

பொய் !
சொல்லத் தெரிந்தவன்
சொர்க்க வாசி .


உரிமை !
சத்தமாய் கேட்டுவிட்டால்
சாவு மணி .


கடமை !
வெளிப்படுத்த தெரிந்தால்
வெகுளி ஆவான்..


உழைப்பு !
உடலைப் பிழிந்தாலும்
உயிர்வளர்த்தல் கடினம்.


பெண்மை !
நாணமென்றால் என்னவென்று
நாணமின்றி கேட்க்கிறது .


ஆண்மை !
பெண்ணைக் கவரமட்டும்
பேயாய் அலைகிறது .


தாய்மை !
கைக்குழந்தையை விற்று
கைபேசி வாங்குகிறது..


இந்தியா !
ஊழல் செய்வோரின்
உன்னதபூமி ஆனது..

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (6-Oct-12, 1:18 pm)
பார்வை : 375

மேலே