பகலில் எரிகின்ற தெரு விளக்குகள்......!

குண்டு பல்பு வேண்டாம்
டியூப் விளக்க பயன்படுத்துன்னான்....

சரி சரி பயன்படுத்தியாச்சி........

பதினாறு மணிநேர மின் வெட்டு....
பத்திரமா குப்புறப் படுத்துக்கோன்னான்......

சரி சரி கொசுவோட கொஞ்சிக்கிட்டு
போர்வைய மூடி வாயப் பொளந்தாச்சி.......

தேர்வு நேரப் பிள்ளைங்க
தேம்பி தேம்பி அழுதாச்சி.........!

தேடி தேடி மின்சாரத்த
கண்ணெல்லாம் பழுதாச்சி.......!

தூக்கமில்லா இரவு விழிக்கையில்
காலை மணி பத்து........!

குழந்தையை கையில் பிடித்து
கடைத் தெருவுக்கு சென்று கொண்டிருந்தேன்....!

தெருவிளக்கு பகலில்
ஜெக ஜோதியாக எரிந்து கொண்டிருந்தது........!

மனசின் ஒளி ஒரு வினாடி அணைந்தது.........!

அடப் பாவிகளா
இரவெல்லாம் கரண்ட்டை கட் செய்துவிட்டு

இப்போது பகலில் இப்படி
மின்சாரத்தை வீணாக்குகிறீர்களே......?!

வேதனையோடு அங்கிருந்த
ரோட்டோரத் திண்டைப் பார்த்தேன்........

எங்கள் பகுதி லைன் மேன்
குறட்டை விட்டு மல்லாந்து கிடந்தான்.......

அவனை தட்டி எழுப்பி
அந்த அநியாயத்தை சொன்னேன்.......

அடித்துப் பிடித்து எழுந்தவன்....
அவசரமாக முதலில் செய்த வேலை.......

ஸ்ட்ரீட் லைட் மெயினை ஆப் செய்தான்......!

இது கடமை உணர்வுக்காக அல்ல.......
இது அவனை அறியாமலேயே
ஆட்டோமெடிக்காக அவன் உடம்பு செய்வது.....

அனிச்சை செயல் என்பார்களே அது போல்.......

சுருக்கமாக சொன்னால்
அவன் விழித்திருக்கும் போது
மின்சாரம் இருக்கக் கூடாது - அவ்வளவுதான்...

ஏனென்றால் அவன் தூங்குவதே கிடையாது....

ஏண்டா இன்னைக்கு இவ்வளவு நேரத் தூக்கம் ?

என்றேன்......

ஹி ஹி நேத்து போட்ட மப்பு என்றான்.........

ஒரே அப்பு அப்பீருவேன்........

உன்னோட ஒவ்வொரு நொடி அஜாகிரதைக்கும்
எத்தனை வாட் மின்சாரம் வீணாகிறது பாரடா ?

எங்களை அவஸ்தையில் தூங்க வைத்துவிட்டு
உனக்கென்னடா மப்பு வேண்டி கிடக்கு மப்பு ?

என்றேன்....

மேலிடத்தில் கேளுங்கள் என்றான்......

சரி என்று மின்சார வாரியத்துக்கு சென்றேன்......

அங்கேயும் வாசலில் - பகல் பொழுதில்
அணைக்கப் படாமல் இருந்தது மின்சார விளக்கு...!

எழுதியவர் : (9-Oct-12, 2:51 am)
பார்வை : 189

மேலே