பஞ்ச குட்டிகள்
நகரத்தின் மையத்திலே
நாற்புற சாலை வீதியிலே
வீட்டின் வெளியிலே
கழிவு நீர் செல்வதற்கான
பாதாள சாக்கடை பாதையிலே
பஞ்ச குட்டிகளை பார்த்தேன்...
அவைகள் பஞ்ச குட்டிகள்
மட்டுமல்ல பஞ்சத்திலே
வாழ்பவைகள்.....
இன்றைய உணவு என்னால்
வழங்கப்பட்டது .
நான் வணங்கும் இறைவா!
நான் சென்ற பிறகு
நாள் தோறும் அவைகளுக்கு
உணவளிக்க மனிதம் குன்றாத
மனிதனை அனுப்பி வை
பஞ்ச குட்டிகளின்...
பசி தீர்க்க.....