நட்பின் உணர்வு

இளகிய என் நெஞ்சினில்...
இறுக்கமாய் மாறியவன் நீ...
நீ என்னுடன் பேச இயலாத ...
நேரங்களில் எல்லாம்....
என் முகம் இறுகி போய் விடுவதை....
உன்னால் உணர முடியுதா...?
நீ "சாதாரணம்" என்று ...
கருதும் காரணங்கள்....
எனக்குள் சதா "ரணமாக"
மாறுவது ....
உன்னால் உணர முடியுதா...?
நான் உணர்த்தவில்லை என்றால்....
அது என்ன "நட்பு"...!
நீயாக உணர முடியவில்லை என்றால்....
என்னடா அது....நட்பு?
உணர்வுகள் உணர்த்த இயலாததை....
இது போன்ற அலங்கார வார்த்தைகளா
உணர்த்தி விட போகின்றன...?
மனதை மெதுவாக காயபடுத்த தொடங்கி விட்டது....
உன் இந்த "மௌனம்"
கொஞ்சம் கொஞ்சமாக "எனக்குள்ளும்"
குடி கொள்ள ஆரம்பித்து விட்டது
உன் "மௌனம்"...!
இப்போது கூட" உன்" மௌனம்
என்று தான் சொல்ல வருது பார்...?
எனக்குள் வேண்டும்...எப்போதும்...எப்போதும்...
"உன்"நினைவு... இல்ல...
"உன்" மௌனம்...!

எழுதியவர் : (16-Oct-10, 2:53 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 1209

மேலே