உன் வெட்கம் என் கவிதை
உன் வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய் ...!
உன் சிரிப்பு என் காதல் மொட்டுக்கள்
என்றால் என்ன செய்வாய் ...!
நீ நிற்பதைக் கூட நிசப்தமாக்குவேன் உன்
நிழலாய் நின்று
உன் காரிருள் கூந்தலையும் களவாடிச் செல்வேன்
நிறமாய்ச் சென்று
உன் பெண்மையும் தன்மை மாறும் -என்
தனிமையைக் கண்டு
ஒரு கவிதையும் காதல் செய்யும் - உன்
கண்களைப் பார்த்து
உன் கண்களும் காதல் செய்யும் - என்
கவிதையைப் பார்த்து .....!!!!!!