மகிழ்ச்சியின் வேறுபாடு
பறவைகளின்
குரல்களுகிடையே
காலை பொழுது,
திடிரென,
நண்பனின் குரல்,
சிறிது நேரம்
உரையாடல்
சில மணித்துளிகளில்
முடிந்தது.
மகிழ்வுடன்.
அறிமுகமற்றவரின்,
கை அசைப்பு
ஒரு சாலை பயணத்தில்,
அவசரம்,
சிறிது துரம் என்று ,
என் வாகனத்தில்,
அவரின் பயணம்,
ஆரம்பித்தார்.
பேச்சை,
முடிக்கவேயில்லை.
அவரது இடம் வந்தும்
இறங்கினார்.
ஒரு வித
மகிழ்ச்சியுடன்( நிம்மதி)
நான்.