இன்னும் கொஞ்சம்
ஈரக் காற்று நாசி தொட
விழி கதவு மெல்ல திறக்க
ஜன்னல் வழி மாயக் கதிர்
தேகம் தீண்டி உறவாட
இரவெல்லாம் பணிகுளித்து
ஆதவன் முகம் காண
காத்திருக்கும் மலர் மேனி
வீசும் மனம்
தூது வந்து சொன்ன தென்றல்
தந்த இதம்
விழி மூட சொல்லுதம்மா
விடிந்ததை கொஞ்சம் மறந்து