கவலை

சமவெளிகள் மனிதனிடம்
சமாதானப்பட்டுப் போயின,

புல்வெளிகளும்,நெற்பயிர்களும்
தாம் காய்ந்துப்போன
கால்தடம் பார்த்து
கண்ணீர் விட்டு அழுகின்றன.

ஆசைகள் அசுரத்தனமாய்
அடுக்கு மாடி கட்டிடமென
அவதாரம் பெற்றன,

மகிழுந்து நிறுத்துமிடத்திற்காய்
இரு மானுடங்கள்
அடித்துக் கொண்டன,

உன்னிடம் இல்லாத
மகிழுந்திற்காய்
ஏனிந்த சண்டை?

எதிர்க்கேள்வியாய்?

இல்லாததைப் பற்றி
யாருக்கு கவலை?

உன்னிடம் இருப்பதைப்
பற்றி தான்!

ஆதங்கமாய்;
அழகான மனைவியில்
ஆரம்பித்து
அன்றைய உன்
சேமிப்பு கணக்கு வரை.

எழுதியவர் : அசுரா (23-Oct-12, 8:49 pm)
சேர்த்தது : asura
பார்வை : 221

மேலே