தொப்புள்கொடி பந்தம்,,,

தொப்புள்கொடி பந்தம்,,,
======================

என் வாழ்க்கை என்னும்
ஜன்னல் திரைக்குப்பின்னால்,,,
சொல்லிக்கொள்ள முடியாத,,,
ஆசையொன்றும் கொள்ளாத,,,
அன்பின் தாகம் தீராத,,,
பாவப்பிறவியாய்
இம்மண்ணில் விதைக்கப்பட்டுவிட்டேன்,,,

கார்மேகம் பிறைசூழவே,,,,
அக்கம்பக்கத்தார் திரைவிரிக்க,,
தந்தன் குடைபிடிக்க,,
வருணன் வசைப்பொழிய ,,,
மனிதப்பிறவியாய் மண்ணில்
வீலென்று ஓலமிட்டு தொங்கினேன்,,

தொங்கிய எனை யாரும் பிடிக்கவில்லை,,,,
தொப்புள் வலித்ததும் தெரியவில்லை,,

கதகதப்பாய் இருந்த,,,
குருதி படிந்த அவள் உள்ளங்கைகளில்,,,,
தத்தித்தாவி சுகமாய் தஞ்சமடைந்தேன்
யாரென்றே தெரியாமல்,,

ஏனோ தெரியவில்லை,
தொப்புள் கொடியில் இலேசாய் ஓர் உறுத்தல்,,
என்னையும்,,அவளையும்,,
பிரிக்கின்றவச்சமயம் இனம்புரியா கேவல்

வலி ஏற்றுக்கொள்ள வாழ்ந்தவள் அவள்
வாழ்க்கை முழுவதும்,,,

என் பிஞ்சுகால்களால்
கொஞ்சிமிதிக்கும் அவள் நெஞ்சம்,,,
அதை பொருத்தும்,,
புன்னகை சிந்துவாள் அப்பூமா தேவி,,,

கட்டிப்பிடிக்கும் கரங்களை
எத்தித்துள்ளி ஓடுகையில் ,,,
வீழ்ந்திடுவேனோ என நினைத்தவள்,,
எனக்கு முன்பாகச்சென்று
கட்டிக்கிடந்த முள்ளி விறகில்
அவையம் பதிந்தென்னை நித்தம் காத்தவள்

அறியாத வயதில்,,,,
முகம் அறியாதந்த தாயெனும் தேவதை,,,

அன்று துள்ளித்தாவும்
மழலை என்னில் அறியவில்லை,,,
இறைவன் சதியில்,, இயற்கை மடியில்,,,
அவள் தலை சாய்த்துக்கிடப்பதை,,,

தடவி பார்க்கிறேன் அசைய மறுக்கிறாள்,,,
கதரிபார்க்கிறேன் கேட்க மறுக்கிறாள்,,,
அடுத்தவரைக் கேட்டால்,,,
அர்த்தமின்றி ஏதோ அனர்த்துகிறார்கள்
அழுகிறார்கள்
அறியாத என்னிடம்
மரணம் என்கிற அப்புரியாத
பாஷையை உரைத்து,,,

தேடுகிறேன்
எனை ஏந்தி வலம் வந்த தேவதையை,,,
தென்பட மறுக்கிறாள்,,,

ஏமாற்ற உறக்கத்தின் நடுவே
அவளற்ற நாட்களின் ஜனனம் ஒரு புதிராய்,,,
கனவுகளில் என்னை உச்சரிக்கிறாள்,,,
அஞ்சி அஞ்சி தடவி பார்க்கும் படுக்கையில்
நான் மட்டும் தனியாய்
அழுது தேய்ந்த ஆயாச இராத்திரிகள்,,,
அத்தனையும் என் உயிர்க்குடிக்கும் (ம)ரணவேதனைகள்,,,,

இன்றோ நாளையோ வந்துவிடுவாள்,,
என்று வாசல்வரை தத்தி தத்தி சென்று ,,
பார்த்து பார்த்து அலுத்துப்போன
மழலைப் பாதங்கள்
வலியில் நடுங்கியதை
உணர மறுத்துவிட்டாள்போல்,,

அதோ தூரதேசத்தில் நின்று கரங்கூப்பி
கண்ணா என்று
அழைப்பதைப்போலொரு அசரீரி
ஆழ்ந்த விழிமூடல்களின் நடுவில்
விழித்தெழுந்து பார்க்கையில்
இன்றும் கூனிக்குறுகிப்போகிறேன்,,,
அவளின் கிடைத்திடா பாசத்திற்காய்,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (26-Oct-12, 6:50 pm)
பார்வை : 303

மேலே