டாஸ்மாக் கணக்கு

அங்கே இங்கே என்று
ஒழிவு மறைவாக அன்று
கள்ளச்சாராயம் குடித்தவர்கள்
வீதியில் உலாவினால்
வகையில்லாமல் உளறினால்
காவலர்கள் பதம் பார்ப்பார்கள்
இல்லையேல் இளித்துக்கொண்டு
காவலர்கள் பணம் பார்ப்பார்கள்

அரசு அனுமதியுடன் மதுபானக்கடைகள்
அதற்குப் பிறகு அரசே விற்பனை செய்யும்
டாஸ்மாக் மதுபானக்கடைகள்
வந்த நாள் முதல் இந்த நாள்வரை....
அது நாட்டுக்கு செய்தது
நன்மைகள் பல என்றேன்
நண்பர் கோபித்து......
நானும் உளருவதாக நினைத்தார்

நகரத்திலிருக்கும் எங்கள் தெருவில்
நல்ல ரவுடிகள் நிறைய இருந்தனர்
இன்று அவர்கள் எங்கே போனார்கள்
என்று தெறியுமா..? என்றேன்
ஓன்று இரண்டு பேர்தான்
உலாவுகிரார்கள் உப்பு சப்பின்றி
மற்றவர்கள் எல்லாம்
மறைந்தார்கள் மண்ணுக்குள்
உபயம் மதுபானக்கடைகளே!

நண்பரிடம் விளக்கும் போது
வீட்டுக்கு வெளியே...விபரீத சப்த்தம்
சன்னல் வெளியே எட்டிப்பார்த்தால்
இருந்தார்கள் சில இளம் ரவுடிகள்....
கூடம் கூட்டமாகக் கும்மாளம் போட்டு...

கூட்டிக் கழித்து
எப்படிக் கணக்கிட்டாலும்
என் கணக்குத் தப்பு

பழைய ரவுடிகள் போனாலும்
புது ரவுடிகள் நிறைய
புறப்பட்டு வந்தார்கள்
புண்ணியம் டாஸ்மாக் கடைகளே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (26-Oct-12, 9:30 pm)
Tanglish : taasmaac kanakku
பார்வை : 105

மேலே