ஐந்து நிமிடம்......
அழகான ஓவியமே
என் உயிருக்குள்
கலந்துவிட்ட காவியமே
உன்னை எப்படி மறப்பேனடா
என் கண்ணா
உன் நினைவுகளை
எதைக்கொண்டு அழிப்பேனடா
பொன்வண்ணா
உன்னிடம் அடிமையாகி போன
என் மனதை
அடக்கி ஆள முடியாமலே
தினம் தினம்
அழுகிறேனே தன்னாலே....
அப்படி உன்னிடம்
என்னதான் இருக்கிறதடா???
என் மனம்
ஏன் உன்னை விட்டு செல்ல மறுக்கிறது
பெற்றோரின் பாசம் பெரிதா?
காதல் பெரிதா ? என தினம்
பட்டிமன்றம் நடத்தும்
என் மனதிற்கு தீர்வு???
கடவுள் அனுப்பிய
ஆளாகவே நினைத்தேனடா
உன்னை பார்க்கவே தான்
பிறந்தேனடா
எப்படி உனக்கு புரிய வைப்பது
என்ன சொல்லி விளங்க வைப்பது
ஒன்றுமே புரியாமலே
பைத்தியமாய் புலம்பி திறிகிறேன்...
கண்ட கனவுகள் பலிக்காது
என தெரிந்தும் கூட
காட்சிகள் மட்டும்
கண்களுக்குள் கலையாது
நின்று கொல்கிறதே....
மரபுக் கோட்டினுள்
நீ இருப்பது தெரிந்தும் கூட
உன்னை மறக்க மறுக்கிறது
மானங்கெட்ட மனது
முழுவதும் உன்னை விட்டு
பிரிந்து செல்ல முடிவுஎடுத்தபின்
என் சிறு கோரிக்கை....
உன் நெஞ்சில்
என் முகம் புதைத்து
அழுவதற்கு மட்டும்
அனுமதி கொடுப்பாயா???
ஐந்து நிமிடம்......
- PRIYA