நிலவு

கூரை நஞ்சிய
ஏழையின் குடிலுக்கு
இலவச மின் விளக்கு....

சுட்டெரிக்கும் சூரியனை
பொழுது சாய விரட்டும்
குளிர் சாதனம்....

எதனையும் பூட்டாமலே
இரவு வானில்
உலா வரும் வெள்ளி ரதம்....

சிறு குழந்தைக்கு
சோரூட்டக் காட்டும்
வேடிக்கைப் பொருள்....

கவிஞனுக்கு
காதலியை வர்ணிக்க
ஓர் அழகிய உவமை....

மேற்கத்திய கிழக்கத்திய
நாடுகள் என்று
மாறி... ... மாறி... பிரயாணிக்கும்
கின்னஸ் பயணி....

எழுதியவர் : சொ. சாந்தி (29-Oct-12, 9:38 pm)
Tanglish : nilavu
பார்வை : 162

மேலே