அரைக்கால் டவுசர்

அரைக்கால் டவுசரும்
நொங்கு வண்டி சகிதமாய்
சுற்றித் திரிந்த
மொக்கயா
பள்ளிக்கூட
புளிய மரத்து பழம்
கசந்து போக
பட்டணம் ஓடிப்போய்
வருடம்
பன்னிரண்டு கழிந்து
வந்தான் முழுக்கால்டவுசரும்
சட்டையுமாக
யாரு?... என பாட்டி
கேட்க முன்னாள்
மொக்கயா இந்நாள்
muthazhagu என்றான்
சலிப்போடு பாட்டி
ஆமாம்...
கழுதைக்கு பேரு
முத்துமணிக்கமாம்.....

எழுதியவர் : ராஜகோபால்.சுப (30-Oct-12, 10:21 pm)
சேர்த்தது : rajagopal.supa
பார்வை : 121

மேலே