முதற் காதல்
ஒரு நொடி கூட நிற்காமல் நடமாடும்
உன் கால்கள்
-அதனால் தோற்றதே ஆயிரம் நடனக் கலைகள்
ஒரு அழகிய ஓவியமாய் வரையாடும்
உன் கைகள்
-அதனால் தோற்றதே ஆயிரம் ஓவியக் கலைகள்
ஒரு பெருகிய பேரலையாய் அலைபாயும்
உன் கூந்தல்
- அதனால் தோற்றதே ஆயிரம் இயற்கைக் காட்சிகள்
ஒரு முத்தாகிய மழைத் துழியாய் சிதறி ஓடும் உன் புன்னகை
- அதனால் தோற்றதே அழகிய மழைத் துழிகள்