குயிலியின் மச்சான்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
அமர்களமாய் திருவிழா ஆர்பாட்டம்.

மக்கள் கூட்டம் பிரம்மாண்டம்.
மயிலாட்டம் புலியாட்டம் ஆரம்பம்.

அங்கொரு மூலையில் வானொலி சத்தம். அதற்கு போட்டியாய் அடிதடி யுத்தம்

அடிதடிக்கு காரணம் போதையின் உச்சம்.
குடிப்பதே பொழப்பாய் கொண்டான்
குயிலியின் மச்சான்.

அடிபம்பில் தண்ணீரை அடித்துக் கொண்டு
இடிபாட்டில் எல்லோரையும் இடித்துக் கொண்டு

இடிப்பிலே குடம் சுமந்து வந்த குயிலியை
இடை மறித்து செய்தி சொன்னான்
அந்த சிறுவன்.

''தண்ணி அடிச்சுட்டு வம்புபண்றான்
உன்னோட மச்சான்.
தட்டி கேட்க வந்தவர்களுக்கு
உதை தான் மிச்சம்''.

அச்சிறுவன் சொல்வதை குயிலி கேட்டு
அலறி அடித்து கணவனை காப்பாற்ற எண்ணி

தன் இடுப்பில் இருந்த குடத்தை கீழே போட்டு
தன் மார்பில் இரு கையால் அடித்துக்கொண்டு

''ஏன் மச்சான் இப்படி நீ குடிச்சுப்புட்டு
எல்லோரையும் ரகள பண்ற''னு
பொழம்பிக்கிட்டு

ஓடிபோய் மச்சானின் முகத்தைக் கண்டு
ஒருபுறமாய் பெருமூச்சை விரைவாய் விட்டு

அரைமயக்கத்தில் இருந்த அவளை அணைத்துக்கொண்டு

அடிபட்டவருக்கு சமாதானம் சொல்லிப்புட்டு
அவசரமாய் குடிசை பக்கம் அழைத்து வந்தாள்
அவள் மகனின் முகம் கண்டு அழுது நின்றாள்.

மாறிமாறி ரெண்டு பெரும் சண்டை போட
மறைவாக மகன் அதை பார்த்து நிற்க

எதை பற்றியும் கவலை இன்றி குயிலியின் புருஷன்
எக்கச்சக்கமாய் அவளை திட்டி தீர்த்தான்

மறு நாள் காலை பொழுது விடிய
மகனை பள்ளிக்கு குயிலி அனுப்ப

மாலையில் மகன் வீடு திரும்ப
மாலைமாலையாய் கண்ணீருடன் அழுதுகொண்டு

''ஏன்டா இப்படி அழுகின்றாய்
என்னதான் நடந்தது பள்ளியிலே''

''எல்லோரும் என்னை திட்டுறாங்க
குடிகாரன் பையன்னு கேலி செய்யுறாங்க''

''பள்ளிக்கு இனிமேல் போகமாட்டேன்
படிப்பெல்லாம் எனக்கு வேண்டாம் என்றான்''.

''நம்மை பற்றி அப்பாவிற்கு கவலை இல்லை
படிப்பை விடு வேற வழி ஏதும் இல்லை''

''எங்கயாவது ரெண்டு பேரும் வேலைக்குபோய்
ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம்

மூலையிலே படுத்துகிடந்த புருசனுக்கு மூளையிலே உரைப்பதுபோல் குயிலி சொன்னாள்

குடிகுடியை மட்டும் கெடுக்காமல் தன் மகனின் படிப்பையும் கெடுப்பதை எண்ணி

சட்டென்று படுக்கை விட்டு எழுந்து வந்து
தன் மனைவி மகனை அணைத்துக்கொண்டு

சத்தியமாய் நான் இனிமேல் குடிக்கமாட்டேன்
நிச்சயமாய் தொடமாட்டேன் கையால் என்றான்

தங்கள் திட்டத்திற்கு வெற்றி கிடைத்ததால்
தங்களுக்குள் சைகை காட்டி சிரித்துக்கொண்டனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அவர்கள் வீட்டில் ஆரம்பம்.

எழுதியவர் : hujja (31-Oct-12, 10:12 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 284

மேலே