எழுதுகோல்
உன் இதழின்
வழியே தான்
உலகமே
பதியப்படுகிறது!
நீயே
எளியவனை
வலியவனாக்குவாய்!
உன் இதழ்
சிரித்த சிரிப்பால்
கலைகளும்
கலைஞர்களும்
உயிர்ப்பிக்கபடுகிறார்கள்!
நீயே
காதலையும்
காதல்
முறிவையும்
அறிவிக்கிறாய்!
நீயே
அறிஞர்களையும்
வல்லுனர்களையும்
படைத்தருளினாய்!
உன்னாலே
அலெக்சாண்டரும்
நெப்போலியனும்
உயர்வு
பெற்றார்கள்!
வையகமே
உன் பணியை
எதிர்ப்பார்த்து...........