புத்தாண்டே வருக

அன்புடன் அழைக்கிறேன்
ஆவலுடன் அணைக்கிறேன்
இனிய புத்தாண்டே வருக
ஈகை உள்ளம் அனைவருக்கும் தருக
உன்னதமான வாழ்வை மலர செய்வாய்
ஊக்கமுடன் உழைக்கும் திறனை கொடுப்பாய்
எட்டுத்திக்கும் என் பாரதத்தாய்
புகழ் பெற செய்யவே வருவாய்
ஏழை என்று எவரும் இல்லாது செய்வாய்
ஐம்புலன்களை அடக்கும் திறனை அளிப்பாய்
ஒவ்வொருவரின் மனதிலும் தானம் வழங்கும்
குணத்தை கொடுப்பாய் -அண்ட
ஓலை குடிசை கூட இல்லாத மக்களுக்கு
வாழ நல்வழிவகை செய்வாய்
ஒளவையின் மொழிகேட்டு நடக்க செய்வாய் .

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (19-Nov-12, 2:39 pm)
பார்வை : 106

மேலே