என் வரிகளில் - தரைமேல் பிறக்க வைத்தான் (படகோட்டி )

எழுத்திலே நிலைக்க வைத்தா
எம்மை தம் கவிதையில் திளைக்க வைத்தா

படிப்பதை பிடிக்கவைத்தா
எனை இவ்வரிமாற்றம் படைக்கவைத்தா

எழுத்திலே நிலைக்க வைத்தா
எம்மை தம் கவிதையில் திளைக்க வைத்தா

கிட்டிடும் கருவை கற்பனைக்கொண்டு
கவிதையாய் பதிப்பவர் இங்கே

பதித்திடும் பதிப்பை ,மதிப்பாய் மதித்து
கருத்தை இடுபவர் அங்கே ...

வெள்ளி துகள்களை (கவிதை) அள்ளிதெளித்த
தளம் (எழுத்து ) தான் உந்தன் வீடோ ?

எழுத்தே சுவாசம் ,எழுத்தே வாசம்
இது தான் உந்தன் வாழ்வோ ?

எழுத்திலே நிலைக்க வைத்தா
எம்மை தம் கவிதையில் திளைக்க வைத்தா

கவிதை எழுதிட வார்த்தை வேண்டி
தவமாய் இருந்தேன் அந்நாள்

வார்த்தைகளே வரமாய் வருதே இன்றி
சபதம் போட்டவள் உன்னால்

ஒருநாள் பதிப்பார் ,மறுநாள் மறப்பார்
மறக்கும் நாட்கள் துயரம்

மறுநாள் பதிப்பாய் .எனநான் இருப்பேன்
மீண்டும்மறப்பாய் துயரம் உயரும் ...

எழுத்திலே நிலைக்க வைத்தா
எம்மை தம் கவிதையில் திளைக்க வைத்தா .....

எழுதியவர் : aasaiajiith (20-Nov-12, 5:50 pm)
பார்வை : 165

மேலே