ராஜீவ்காந்தி ஓ௫ சோக கீதம்

ராஜீவ்காந்தி ஓ௫ சோக கீதம்

அன்னை இந்திராவின்
அ௫மை புதல்வனே
ஆசிய ஜோதி நே௫வின்
ஆ௫யிர் பேரனே
இந்தியாவின் முன்னாள் இளய பிரதமரே
இடம் விட்டு இடம் வந்து
ஈவு இரக்கமின்றி
ஈழு பெண் ஒ௫த்தியின் சதியால்
உடல் சிதைந்து உ௫குலைந்து
உலகை வட்டு சென்றாயே
ஊா் கூடி அழுகிறதே
ஊமையாய்த் தவிக்கிறதே
என்று தனியும் இந்த வன்முறை தாகம்
எப்பொழுது காண்போம் இனி உன்னை
ஏன் இந்த துா் மரணம் உனக்கு
ஏங்கி ஏங்கி மனம் பரிதவிக்கிறதே
ஐயம் இல்லை தமிழ் நாட்டில் என்றாயே
ஐயகோ தமிழ் நாடே உந்தன் பலிபீடம் ஆனதே
ஒ௫ முறை இ௫முறை எட்டி பார்த்த எமன்
ஒரேடியாக அள்ளிக் கொண்டு போனானே
ஓ வென்று கதறி அழுதாலும்
ஓடி ஓடித் தேடினாலும்
ஓளடதம் தான் இதற்கு இல்லையே
ஒளடதம் தான் இதற்கு இல்லையே

எழுதியவர் : பானுமதி ரேவூர் பத்மநாபா ப (21-Nov-12, 8:37 pm)
சேர்த்தது : banushreya
பார்வை : 184

மேலே