செந்தமிழ் எனும் "தேன்" மொழி

நினைத்"தேன்" தமிழினை
சுவைத்"தேன்" தேன் சுவை
சிரித்"தேன்" மனதினில்
ரசித்"தேன்" தமிழினை
கழித்"தேன்" பிற ஒலி
களித்"தேன்" தமிழ்மொழி
கொழித்"தேன்" மகிழ்வினில்
மொழிந்"தேன்" தமிழ்மொழி
இனித்"தேன்" முப்பாலில்
லயித்"தேன்" முத்தமிழில்
படித்"தேன்" பண்பாட்டில்
செயித்"தேன்" பாரினில்...!
அறிந்"தேன்" எழுத்தினை
தெளிந்"தேன்" பொருளினை
அணிந்"தேன்" அணியினை
அளந்"தேன்" சொல்லினை
வரைந்"தேன்" யாப்பினை
வளர்ந்"தேன்" தமிழென....!
துதித்"தேன்" மெய்தனை
மதித்"தேன்" உயிர்தனை
மலர்ந்"தேன்" உயிர்மெய்யென
பறந்"தேன்" தமிழ் வானிலே...!
வழி"தேன்" மலரென
வடித்"தேன்" தமிழ்கவி
முடித்"தேன்" என இல்லை
எடுத்"தேன்" மறுபடி
தொடுத்"தேன்" சில வரி - அது
பிறந்"தேன்" வந்"தேன்" மறைந்"தேன்" - என்பது
செந்"தேன்" மொழிக்காய் அமைந்திடல் வேண்டும்
உயிர்த்"தேன்" உறைய மரித்"தேன்" எனினும்
வாழ்ந்"தேன்" தமிழுக்காய் என வரலாறு சொல்லட்டும்..!!!!

உங்கள் அன்புத் தமிழ்த் தோழன்.....
அரிகர நாராயணன்

எழுதியவர் : (22-Nov-12, 10:48 pm)
பார்வை : 247

மேலே