சிறப்பினும் சிறப்பாய்
கவி படைக்க ஆசை யெழுந்து
வன யுச்சியில் அமர்ந்தேன்
அங்கே
குயில்கள் பாடி சென்றன
மயில்கள் நடனமாடின
மலர்கள் மனம் வீசன
வண்டுகள் சப்தம் யெழுப்பின
பலாக்களும் தேன்களும் சொரிந்து யிருந்தன
கலை மானும் பினைமானும் யுரங்கின
மண் வாசனையும் மலர் வாசனையும் மனந்தன
அங்கே
அமர்ந்தேன்
படைத்தேன்
சிறப்பினும் சிறப்பாய் ஓர் கவிதை
தமிழ் யென