!*!தோழிக்கு ஒரு கவிதை!*!
உன் விரல் தீண்டி பல கதைகள் பேசியதில்லை!!
நீயும் நானும்...
உன் கை கோர்த்து நடந்ததில்லை!!
நீயும் நானும்...
தொடும் தூரத்தில் நீ இருக்க...
என் நிழல் கூட தொடவில்லை உன்னை!!!
தொலைபேசி அழைப்புகளில்,
தொல்லைகள் பல நான் உனக்கு தர...
பொறுத்து கொண்டாய் பொறுமையாய்!!!
என் வாழ்க்கையில்,
தோழி நீ நிலவாய் வந்தால் காலையில் மறைய கூடும்,,,,
எனவே என் விழியாய் வரக்கூறினேன் உன்னிடம்,,,,
நாம் பிறந்த கருவறை வேறு ஆனால்,,,
நம் கருத்துக்கள் ஒன்றாய் இருக்க...
வியந்து போகின்றனர் நம் நட்பில் அனைவரும்!!!
கண்ணீர் துடைக்க கை இன்றி இருந்த எனக்கு...
உன் கைகளை தந்தாய்!!!!
உண்மையான காதலர்கள் தான்,
அதிகம் புரிந்து கொள்கின்றனர் என்பது பொய்!!!
ஏன் என்றால் அதை விட நீ அதிகம் புரிந்து கொண்டாய்...
அப்படி என்றால் நானும் காதலன் தான்,,,
தோழி நம் நட்பை காதலிப்பதனால்!!!