இன்று தமிழ்

ஒவ்வொருநாளும்
காலை மணி ஏழுக்கு
கலைஞருடன்
பேசுவது வழக்கமாம்.
கொசுவை ஒழிக்க வழியில்லை.
goodnight விளம்பர வருவாய்
டிவியில்.
நீர் தர ஆழ்ந்த எண்ணமுமில்லை
நகராட்சி
வரி வசூலிப்பு.
ரௌடிகளின் அரசாட்சி அட்டூழியம்
போலீஸ் கேட்க
நாதியேயில்லை.
மின்சாரம், கேட்கவே வேண்டாம்
நினைத்த பொழுதினில்
அணைப்பு.
பட்டிதொட்டியெல்லாம்
மக்கள் தன்தன் வழி வாழ்க்கை,
அரசை சார்ந்து இல்லாமல்.
நோட்டுக்கு வோட்டு போடும் ஜனநாயகம்.
அதுகூட ஞாயமாய் நினைக்கும் மக்கள்!
நன்மை செய்வது என்பதையே மறக்கடித்த
உம் தலைவர்,
வாரிசுகள் அனைவருக்கும் நாட்டை பட்டா போடும் உம் தலைவர்.
கசக்கி கவிதைஎழுதும் உமக்கு இவை கேட்க மனமில்லையா வைரமுத்துவே!
இந்த நட்பு என்ன புகழுக்கு மட்டும்தானா.
தமிழுக்கு இல்லையா!
உருப்படியாய் ஏதாவது செய்ய முயலும்.

எழுதியவர் : jujuma (23-Oct-10, 2:10 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 366

மேலே