@#@#@ காலமாற்றங்கள் @#@#@
நினைவுகள்
நிச்சயமற்று உதிர்ந்தால்
நிழலாடும் என் நெஞ்சில்
இலையுதிர் காலம்
வரவுகள்
வரவேற்க காத்திருந்தால்
கொண்டாடும் என் நெஞ்சில்
வசந்த காலம்
புரியாத
புல்லரிப்புகள் நச்சரித்தால்
புலம்புகின்ற என் நெஞ்சில்
மழைக்காலம்
போக்கற்று
போகாத மனச்சுமைகள்
வறட்சியாகும் என் நெஞ்சில்
கோடைகாலம்
மூச்சு
முட்டும் முரண்பாடுகள்
முகமூடிகளாய் என் நெஞ்சில்
குளிர்காலம்