!!*!!வாழுங்கள் வாழ்கையை!!*!!

கேட்காமல் கடவுள் அளிக்கும் வரம்,
"மரணம்"
ஏனோ மனிதர் பெற்று கொள்கின்றனர் இடையிலேயே!!!
என்ன கஷ்டம் கொண்டனரோ புரியவில்லை...!!

வெள்ளையனை எதிர்த்து போரிட்ட போதும்,,
இத்தகைய உயிர் இழப்புகள் அதிகம் இல்லை....
ஆனால் இறந்தனர் அங்கே பலர்,
"போர்களத்தில் நின்று போராடி"
வாளை வாங்கினர் மார்பினில் அணிகலனாய்,,,
எங்கே சென்றது அந்த "தமிழர்களின் வீரம்".....!!!

சுவாரசியம் நிறைந்த இந்த உலகில்,,
சுற்றி பார்க்க இயலாத மானிடர்கள்...

உங்களை பணக்காரர்கள் கொண்டாடும்,,
வான வேடிக்கைகளை பார்க்க சொல்லவில்லை...
அந்த வானத்தை கூட
பார்க்க இயலாதவர்களை பாருங்கள்...!!!

கண்களில் கண்ணீர் துளிகளை நிரப்பி,,
எழுதுகிறீர்கள் உங்கள் சோகங்களை,...
ஆனால் "கண்களே இல்லாதவர்களுக்கும்"
சோகம் இருக்கும் என்பதை
புரிந்து கொள்ள மறுக்கிறது உங்கள் இதயம்....!!

இங்கே அறிவாளிகள் என்று,
அறிவிக்கப்படும் அனைவரும்,
ஒரு காலத்தில் "அசிங்கப்படுத்தப்பட்டவர்கள்"
என்று நினைவில் கொள்ளுங்கள்.,..!!

"இறப்பே இயல்பு"
மனிதன் வாழ்வின் இடைவெளி சிறிது,,
ஆனால் "இனிமைகள் இருக்கிறது ஏராளம்"

வெறுத்து போய் இறப்பதற்கு,
"வாழுங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தவாறு"

எதிர்ப்புகள் இருந்தாலும்,,
"விழ்ந்தாலும் எழுந்தாலும்"
ஏற்று கொள்ளுங்கள் "ஏணிகளாய்"

இறப்பு விடையாய் இருக்காது,
உங்கள் பூலோக கேள்விகளுக்கு.,
"தேடுங்கள் விடைகளை"
"உங்கள் விதிகளை அல்ல".....!!

எழுதியவர் : அரவிந்த் .C (2-Dec-12, 8:07 pm)
பார்வை : 186

மேலே