பாரம்பரியம்???
எங்கள் வீட்டு வரவேற்பறையில்
அழகாய் மாட்டி வைக்கப்பட்டுள்ளன
தாத்தா பாட்டி
பூட்டன் பூட்டி
போட்டோக்கள் ......
ஆனால்
பாசமுள்ள அப்பாவோ
மாசம் ஐயாயிரம்
தவறாமல் கட்டுகின்றார்
தாத்தா சாப்பாட்டுக்காக
முதியோர் இல்ல கட்டணம் !!