உதவும் கரங்கள்

வாழை ,பனை ,தென்னை
இவையாவும் பயன்களாம்...

தொடர்ந்து நீரூற்ற
இலை,காய் ,பழம் என்று
கிடைக்குமாம் வாழையிடம் !!

உதவியை எதிர்பார்ப்பார்
வாழை போல ....
விலகிடுவார் இல்லையேல் !!

நீர் ஊற்றினால் போதும்
கன்று ஊன்றும்
பொழுது மட்டுமே !!
தேவை இல்லையாம் நீர்
வளர்ந்ததும் !!

அவ்வம் சமயங்களில்
எதிர்பார்ப்பார்
தென்னை போல !!

தானாகத் தோன்றுமாம் பனை
யாருடைய உதவியும் இல்லாமல் !!
ஊற்ற வேண்டியதில்லை நீர்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி
பலன் தருமாம்
வளர்ந்ததும் !!

இன்முகதான் உதவுவர் .
பிரதிபலன் பாராது உதவுவர்
பனை போலே !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (5-Dec-12, 9:48 pm)
பார்வை : 285

மேலே