தேர்தல்
மாண்டவன் மீள்கிறான்
கைநாட்டு கையொப்பமாகிறது
கையொப்பம் கைநாட்டகிறது
ஆண் பெண்ணாகவும்
பெண் ஆணாகவும்
அடையாள அட்டையில்
முகவரியற்றவன் முகவரிபெருகிறான்
முகவரி உள்ளவன் முகவரியற்று
காந்திக்கும் வாக்களர் அட்டை
நேருவுக்கும் பூத் ஸ்லிப்
மனித வேட்பாளருக்கு
விலங்கு சின்னம்
வாக்காளருக்கு வாசலில் வாகனம்
பின்பு அவன் கால்களே வாகனம்
வாக்கு கனவுகளோடு வாக்காளன்
பதவிக் கனவுகளோடு வேட்பாளன்
கனவுகளோடு வாக்களிதவனுக்கு
முடிவில் மிஞ்சப்போவது
கனவுகள் மட்டும்