கவிதையான கவிதையே .......என் மகனே..

பிஞ்சு விரல் ஒவ்வொன்றும்
பஞ்சு போன்ற மென்மையடா
நஞ்சு கூட முறிந்துவிடும்
அஞ்சு விரல் ஸ்பரிசமடா

அழாக நீ சிரித்தால் 
அமுது வழிந்தோடுதடா
ஆடி அசைந்து வருகையிலே
ஆவல் மிக பெருகுதடா

தத்தி தத்தி நடக்கையிலே
துள்ளி மனம் குதிக்குதடா
திக்கி திக்கி பேசுகையில்
தித்திப்பாய் கேட்குதடா

அருகே நீ வருகையிலே 
அனைத்துமே மறக்குதடா
ஆசை முத்தம் தருகையிலே
ஆனந்தக் கண்ணீர் வழியுதடா

எழுதியவர் : (10-Dec-12, 1:01 am)
சேர்த்தது : kanniammal
பார்வை : 80

மேலே