இந்திய ராணுவமும் தொடர் கற்பழிப்பும் ...! எங்கே..? இந்தியாவில் தான்..!

இந்திய ராணுவமும் தொடர் கற்பழிப்பும் ...! எங்கே..? இந்தியாவில் தான்..!

டெல்லி மட்டுமே முழு இந்தியா அல்ல... விதர்பா மற்றும் ஆந்திராவில் கடந்த 10- 15 ஆண்டுகளில் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகள் தற்கொலையில் உலக சாதனை இது. - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி - மார்க்கண்டேய கட்ஜூ.

மணிப்பூர் பெண் போராளிகள்..! (படங்கள் கீழே )
2002- இல் மனோரமா இந்திய ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு (அதென்ன பாலியல் வன்முறை..? குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய் கும்பலாக கற்பழித்தல் என்று பொருள்.) உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது நடத்திய போராட்டம் தான் இந்த நிர்வாண போராட்டம் ..! நிர்வாணமே ஆயுதமாக..!

மணிப்பூரில் கற்பழிப்புக் குற்றங்களை இன்னும் செய்து கொண்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை தூக்கில் போடச் சொல்வதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களே, இந்திய ஊடக அசிங்கங்களே குரல் கொடுக்கத் தயாரா? உண்மைகள் நிர்வாணமாக உலவுகின்றன. பரபரப்பும் ஆடைகளுடன் திரிகிறது. இந்திய ஜனநாயகமே வெட்கமாக இல்லையா? ஏதோ இப்போதுதான் கற்பழிப்புக் குற்றங்கள் நடப்பது போல் ஏன் இந்த மொள்ளமாரித்தனம்.
இந்திய ராணுவம் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நடத்திக் கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகளுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கேட்க துணிவிருக்கிறதா?

- அ.மார்க்ஸ் -
குறைந்தபட்சம் இரு தொலைகாட்சியிலிருந்து கூப்பிட்டார்கள். டெல்லி பாலியல் வன்முறை குறித்து உரையாட வேண்டுமென. நான் இயலாது எனச் சொல்லிவிட்டேன். இது கண்டிக்கப்பட வேண்டியதுதான். கருத்து மாறுபாடில்லை.ஆனால் இன்று ஏற்பட்டுள்ள ஊடகப் பெருக்கத்தில் தினம் மெல்லுவதற்கு அவர்களுக்கு அவல் வேண்டியிருக்கிறது. சீரியசாகவும் விவாதிப்பதில்லை. இன்னும் கடுமையான தண்டனைகள் வேண்டும், என்கவுன்டர் செய்ய வேண்டும், மனித உரிமை பேசுபவர்களால் தான் இத்தகைய குற்றவாளிகள் தப்புவதற்குக் காரணம் என்கிற ரீதியிலேயே விவாதங்கள் நடை பெறுகின்றன.

மார்க்கண்டேய கட்ஜு சொல்லியிருப்பதுபோல நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள். விவசாயிகள் தற்கொலை செய்து
கொள்கிறார்கள். சென்ற 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆயிரத்து எழுநூறு போலி என்கவுன்டர் புகார்கள் வந்துள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் சொல்கிறது. தவறுதலாகப் 13 பேர்களுக்கு மரண தண்டனை வழங்கிவிட்டதாக உச்ச நீதிமன்றம் வருந்துகிறது.

உலக அளவிலானன பிரச்சினைகள், நாட்டளவிலான பிரச்சினைகள், சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு, மின்சார வெட்டு, கூடங்குளம், அத்தியாவசியப் பொருட்களை வருமானம் குறைந்தவர்களுக்குக் குடும்ப அட்டைகள் மூலம் வழங்கி வருவதை ஊத்தி மூட வெறியுடன் செயல்படும் மன்மோகன் அரசு... எல்லாவற்றையும் அவ்வப்போது வரும் பிரச்சினைகளில் மூடி மறைத்துவிட்டு மத்திய, மாநில, உலக அரசுகளும் அதிகாரங்களும் எத்தனை மகிழ்ச்சியாக உள்ளன?

நாம் எல்லோரும், இது எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் விஷயங்கள் குறித்து மட்டும் கருத்துச் சொல்வதிலும், இதுவே, இது மட்டுமே இன்றைய முக்கிய பிரச்சினை என்கிற கட்டுமானத்திலும் எப்படியெல்லாம் பங்குபெற வைக்கப் படுகிறோம்?

"உணர்ச்சி தமிழரே எழுர்ச்சி கொள்ளுங்கள்"

இன்று ஒரு டெல்லி மாணவி மானபங்கபடுத்த பட்டதற்கு இந்திய பாராளுமன்றம் முடங்கியது ! நம் தமிழ் உறவுகள் துடிக்க துடிக்க கற்பழிக்க பட்டபோதும் ,600 மீனவர்கள் சுட்டு பொசுக்கிய போதும் நம் இந்திய பாராளுமன்றம் முடங்கியதா ? இல்லை ஏன் நாம் தமிழர்கள் அவர்கள்
இந்தியர்கள் !

தொகுப்பு
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (20-Dec-12, 10:46 am)
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே