மாயன் நாட்காட்டி

இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படும் பேச்சு இந்த மாயன் நாட்காட்டி! நம் ஊரில் பஞ்சாங்கம் எழுதுவது போல் மாயன் என்ற ஒரு ஜோதிடக்கார குடும்பத்தினர் இருந்திருக்கிறார்கள்.அவர்கள் எழுதிய நாட்காட்டி இந்த வருடம் டிசம்பர் 21 வரைதான் இருக்கிறதாம். எனவேநாளைதான் உலகத்தின் கடைசி நாளாம். இது எப்படி இருக்கிறது தெரியுமா? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ! என்று நம் ஊரில் சொல்வோமே !அதுதான் இது.
உலகம் முழுவதும் எப்படி இப்படி முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்புகிறார்களோ?
முதலில் நாம் இப்போது சாதாரணமாகப் பயன்படுத்தும் ஜோதிடப் புத்தகமே பொய்தான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை.
எப்படி எனில்,இப்போதுள்ள ஜோதிடப் புத்தகங்கள் எல்லாமே புவிமையக் கோட்பாட்டின்படி ,அதாவது புவி மையத்திலும் மற்ற கோள்கள் அனைத்தும் புவியை சுற்றுவதாகவும் இருந்த போது எழுதியவைதான்.
ஆனால் ,சூரியன்தான் நடுவில் உள்ளது.புவி உட்பட எல்லா கோள்களும் சூரியனைத்தான் சுற்றுகின்றன என்பது ,சூரிய மையக் கோட்பாட்டின் படி உண்மை என்பது விளங்கும்!
அப்படியென்றால் இந்த ஜோதிடக் கணிப்புகள் எப்படி உண்மையாக இருக்க முடியும்?
இப்படியிருக்கையில் ,உலகம் முழுவதும் எப்படி ஒரு நாட்காட்டியைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்?
நாளை இந்த உலகம் அழிகிறதோ இல்லையோ ,
இந்த முட்டாள்தனமான கருத்துக்களுக்கும் அதைப் பரப்புகின்றவர்களுக்கும்தான் அழிவு காலம் என்பது நிச்சயம் என்று நம்புவோம் .