கரு இரவு ... ஓர் அழகு.....!!!!
மஞ்சள் வெயில் கொஞ்சம் விலக,
கொஞ்சும் இரவில் நெஞ்சம் இலக,
வஞ்சமில்லா வானில், நிலவு தஞ்சம் கொள்ள,
கெஞ்சும் இளமை, இரவு மஞ்சம் சேர..
கரு மை வானில் வெறுமை ஏனோ,
இரவை ஒத்த பெண்மை தானோ..
அகவை மொழிய விரும்பா பெண்மை இவளோ,
உரையைத் துறந்து வெறுமை நிறைந்தாளோ..
நட்சத்திரங்கள்..
மேக வானில்,
சோக ஊர்வலம்..
தேயும் நிலவின் தேக நிலை குறித்து,
அது மாயும் நாளாம் அம்மாவாசையை நினைத்து,
வானில் சோக ஊர்வலம்..
மக்கள் கூட்டம் மந்தையான பகலை,
பிக்கள் புடுங்கல் நிலையான உலகை,
சிக்கல் இல்லா நித்திரை இரவாக,
இறைவன் படைத்தான், சூரியனை ஒழித்தான்..
செவி ஓரம் வீசும் ஈராக் காற்று,
துணை சேரத் தேடின மாலை நேற்று..
விழியோரம் இன்று காதல் கொண்டு,
மணம் முடித்தது பேசா இரவை இன்று..!!!