!!!=== பொங்கல் கவிதை போட்டி ===!!! 2

''பொங்கல் திருவிழா கவிதை போட்டி''
=================================

எழுத்து சொந்தங்களே... தோழமை உள்ளங்களே...
இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது, நீங்கள் பொங்கல் போட்டிக்கு கவிதைகளை பதிவு செய்ய, உடனே தயாராகுங்கள் ஒன்றாம் தேதி புதுவருடத்திலிருந்து பதிவிடுங்கள், சனவரி பத்தாம் திகதி மாலை ஆறுமணிவரை உங்களுக்கு கவிதை எழுத அவகாசம் இருக்கிறது.

முதலில் நான் முதல் பரிசு 3000 ஆயிரமென்றும் சிறப்பு பரிசுகள் இரண்டு கவிதைகளுக்கு தலா ஆயிரமென்றும் அறிவித்து இருந்தோம், இப்பொழுது அந்த அறிவிப்பில் சிறு மாற்றம் என்னவென்றால்! முதல் பரிசு 4000 மும் இரண்டு கவிதைகளுக்கு சிறப்பு பரிசாக தலா 1500 ரும் உங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

இதற்கு முன் எனது முதல் முயற்சியாக உழவர்களின் நல்லேறு தினத்தை முன்னிட்டும், சே குவேராவின் பிறந்த தினத்தை முன்னிட்டும், எழுத்து தளத்தின் முழு அங்கிகரத்தோடு கவிதை திருவிழா போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம், பல திறமையான படைப்பாளர்களை வெயிலே கொண்டுவந்து அனைவருக்கும் அறிமுகம் செய்தோம், அதில் எழுத்து தோழமைகள் எனக்களித்த முழ ஆதரவை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை.

அய்யா அகன் அவர்களின் புத்தக முயற்சி வெற்றிக்கு பிறகு, எனது சிறு முயற்சியாக தற்பொழுது தமிழர்களின் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ''பொங்கல் திருவிழா கவிதை போட்டி'' நடத்த முன் வந்திருக்கிறோம், தளத்தில் உள்ள சிறப்பான படைப்பை திறமைமிக்க மூத்த நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 4000 மும் சிறப்பு பரிசாக இரண்டு கவிதைகளுக்கு தலா 1500 ம் அளிக்கப்பட உள்ளது,

நீங்கள் கவிதை எழுத வேண்டிய தலைப்புகள்;

1. தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)

2. உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)

3. உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

ஆகிய இந்த மூன்று தலைப்புகளில் உங்கள் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன, சனவரி ஒன்று காலை ஆறு மணியிலிருந்து சனவரி பத்து மாலை ஆறுமணிவரை கவிதை எழுத உங்களுக்கு கால அவகாசம் கையில் உண்டு, சனவரி பதினைந்தாம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும்,

மேற்கூறிய மூன்று தலைப்புகளில் இப்பொழுதே எழுத தொடங்குங்கள், சனவரி ஒன்றிலிருந்து எழுத்து தளத்தில் பதிவிடுங்கள், எழுத்து தளம் நமக்காக முகப்பு பகுதியில் ''பொங்கல் கவிதை போட்டி '' என்று தனி பக்கத்தை உருவாக்கி தந்துள்ளது, அதில் படைப்புகள் அது குறித்த நிலைபாடுகளையும் அறிந்துகொள்ளலாம்.

சிறந்த படைப்பையும், சிறந்த படைப்பாளர்களையும், கௌரவித்து அவர்களை வெளியே கொண்டுவந்து பலரும் அறியும்படி செய்வதற்கே இந்த போட்டி நடத்தப்படுகிறது, மேலும் எழுத்து தளத்தின் முழு அனுமதியோடு, எழுத்து தளத்தின் சார்பாகவே இந்த போட்டி நடத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், இந்த போட்டி நாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணமாக அமையுமென்று நம்புகிறோம்,

முக்கிய குறிப்புகளும் விதிமுறைகளும்;,
==================================

1. கவிதையை பதிவிடும்பொழுது தவறாமல் தலைப்போடு அடைப்பு குறிக்குள் (பொங்கல் கவிதை போட்டி) என்று தவறாமல் குறிப்பிடவும்.

2. சனவரி ஒன்றிலிருந்து பத்தாம் தேதி மாலை ஆறு மணிவரை நீங்கள் உங்கள் படைப்பிகளை பதிவிடலாம், அதன் பிறகு பதிவிடும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

3. சனவரி பதினைந்தாம் நாள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் அளிக்கப்படும்.

4. கவிதை 24 வரிகளுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும், அப்படி 24 வரிகளுக்கு மேல் இருந்தால் அந்த கவிதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

5. பிறமொழி கலப்பை கவிதையில் தவிர்ப்பது நல்லது.

6. ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே பதிவு செய்ய வேண்டும், ஒரே தலைப்பில் ஒன்றிற்கு மேல் பதிவு செய்யப்படும் கவிதைகளை திருவிழா குழு நிராகரிக்கும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது, 12 நடுவர்கள் நான்குகட்ட குழுக்களாக இருந்து செயல்பட்டுகொண்டு இருக்கிறார்கள், அவர்கள் ஆய்வு செய்து தேர்வு செய்த பிறகு இறுதிகட்ட நடுவர்களால் தேர்வு செய்யப்படும் படைப்பிற்கு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

8. உங்களுக்கு சொந்தமான பதிவுகளை மட்டும் பதிவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.

பத்து நாட்கள் பத்திரமாக கையில் இருக்கின்றன, இப்பொழுதே எழுதத்தொடங்குங்கள் சனவரி ஒன்றாம் தேதியிலிருந்து பதிவிடுங்கள், நன்றாக யோசியுங்கள், எழுத்து பிழையின்றி எழுதுங்கள், ஒரு முறைக்கு மூன்று முறைகள் வாசித்து பார்த்து கூர்மையான வார்த்தைகளை பொருத்தமான இடத்தில் பொருத்தி தெளிவாக பதிவிடுங்கள்.
பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்குழுவின் சார்பாக உங்களை வெற்றிபெற வாழ்த்துகிறோம். இந்த விடயத்தை உங்கள் தோழமைகள் அனைவருக்கும் பகிர்ந்து கவிதை எழுதுமாறு பரிந்துரை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

போட்டிகுறித்த சந்தேகங்களையும், விளக்கங்களையும் உயர்திரு மு. ராமச்சந்திரன் அவர்களிடம், 9538324599 என்ற அலைபேசி எண்ணிலும் தனி விடுகை மூலமாகவும் கேட்டு தெளிவடையலாம்.

தோழமையுடன்
திருவிழா குழு மற்றும் எழுத்து குழுமம்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (30-Dec-12, 9:03 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 167

மேலே