பிறந்த நாள்

எனது பிறந்த நாள்
டிசம்பர் 31
நான் பிறந்த பின்னரே
புத்தாண்டு பிறந்ததாய்
எனக்கொரு பெருமையுண்டு
பள்ளிச் சான்றில்
மே 30
பிறந்த நாள்
டிசம்பர் 31 என்றால்
அது பலரால் பொய்யாகவே
புரிந்து கொள்ளப்படுகிறது
நான் நினைத்துக் கொள்கிறேன்
நான் பிறப்பதற்காக இந்த
உலகம் பிறந்ததென்று

எழுதியவர் : மா.தாமோதரன் (30-Dec-12, 9:28 pm)
சேர்த்தது : m.thamotharan
Tanglish : pirantha naal
பார்வை : 82

மேலே