புத்தாண்டை வரவேற்போம் புதுவிதமாய் .

ப்ரண்ட்ஸ்:
ஹேப்பி நியூ இயர்
இனி இல்லை என்றும் துயர்
வாழ்கையில் வெற்றி நடை போட்டு உயர் .

லட்சியம் எடுத்துகொள்வோம் -நண்பா
லட்சியம் எடுத்து கொள்வோம்
நிச்சயம் வெற்றி காண்போம் -நண்பா
நிச்சயம் வெற்றி காண்போம்

அலட்சியம் வேண்டவே வேண்டாம் -நண்பா
லட்சியம் எடுத்து கொள்வோம்

கடந்த ஆண்டை மறந்து விடு
நடக்கும் ஆண்டை கறந்து விடு
கரைந்து போனது நாட்கள்
கடந்து போன வருடத்தின் நாட்கள்

புதிய ஆண்டை வரவேற்போம் உற்சாகத்தோடு
வெற்றி பாதையை நோக்கி நடை போடுவோம்
தன்னம்பிக்கையோடு !

செடியில் பூக்கள் உதிர்ந்துவிட்டால்
உதுர்ந்த பூக்கள் மீண்டும் செடியில் பூக்காது
கால நேரம் கடந்துவிட்டால்
கடந்த காலம் நம்மை வந்து
என்றும் சேராது !

மலராய் நீயும்
மலர்ந்து மனம் வீசு !
தன்னம்பிக்கை வைத்தால்
துன்பங்கள் வெறும் தூசு !
வியர்வை சிந்தி நீ உழைத்தால் உன்
கையில் வந்து சேரும் காசு !

நண்பா நண்பா நண்பா -நீ
நடை போடடா நம்பிக்கையோடு
தெம்பா தெம்பா !

அந்த நிலவை நீயும் கையில் பிடிக்கும்
கனவை நாளும் காணடா !
உன்னால் நிச்சயம் முடியும்
எல்லாம் நம்பிகைதானடா !
சுட்டெரிக்கும் சூரியனை
ஏழையின் வீட்டு அடுப்பெரிக்க
விறகாய் ஆக்கிடுவோம்-அந்த
ஆகாயம் தன்னை எடுத்துவந்து
குடிசை ஒன்றை அமைத்திடுவோம்

லட்சியம் எடுப்போமே !
அதில் நிச்சயம் செயிப்போமே!

அன்புடன். சிங்கை கார்முகிலன்

******************************************************************
புத்தம் புது பூவாய் மலரும் புத்தாண்டு
அகிலத்தில் உள்ள அனைவருக்கும்
இன்பத்தை கொடுத்து
இன்னலை களையுமாறு
இறைவனை இரு கரம் கூப்பி
வேண்டிகொள்கிறேன் .

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (31-Dec-12, 9:57 am)
பார்வை : 165

மேலே