கேசவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கேசவன் |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 27-Sep-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 8 |
தமிழ் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவன்
உன்னுள் எனை உருவாக்கி
உயிர் கொடுத்து
உன் குருதியை
உணவாய் அளித்து என்னை
உலகுக்கு அழைத்து வந்த
உன்னைப் பிரிந்ததால்
நான் வீரிட்டு அழ
எனை வாறி எடுத்து
அணைத்து நீ அளித்த
முதல் முத்தத்தில்
தொடங்கியது என் வாழ்கை
என் காதலே
என்று நீ வருவாய்
என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயும் நகராது
நின்றுக் கொண்டிருக்கிறேன்
என்றோ ஒரு நாள்
எங்கிருந்தோ வந்தாய்
என்னை முத்தமிட்டாய்
எங்கோ மறைந்தாய்
எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
கேள்விக்கு பயந்து
கதிரவன் ஒளிகிறான்
காற்றோ எனை சற்றும்
சீண்ட மறுக்கிறான்
காக்கையிடம் கேட்டேன்
உனக்கேனும் தெரியுமோ?
கடிந்து கொண்டே
பறந்து சென்றான்.
கடைசி வறை
காத்திருப்பேன் காதலே
நீ காலம் தாமதித்தால்
நான் மண்ணோடு மடிந்துபோவேன்
மரம் மழையிடம் அழுதது.
காலம் கடந்து ஓடும்
காட்டாற்று வெள்ளம் நான்
கரை புரண்டு ஓடும் என்னை
கட்டுமரம் தான் என்செய்யும்?
தயங்கியே தலை நீட்டும்
தென்னை தான் என்செய்யும்?
கதிரவன் எனை காய்ச்சினாலும்
காற்றில் ஒன்றர கலந்திடுவேன்
பெருமழையாய் பெய்து
மீண்டும் பெருக்கெடுப்பேன்,
கடலிலே நான் கலந்திட்டாலும்
அலைகடலாய் மாறி நிற்ப்பேன்
அங்கேயும் ஓயாமல் ஓடிக்கொண்டிருப்பேன்.
யாருக்காக தாயி அழுகுற
அனாதையா விட்டுப் போன
ஆத்த நெனச்சி அழுகுறியோ?
ஆளரவம் அத்துப் போன
வயல நெனச்சி அழுகுறியோ?
உம்பிள்ளை அறுத்துப் போட்ட
மரத்த நெனச்சி அழுகுறியோ?
தாயி நீ அழுதா
தனயன் என்ன செய்வேன்!
உனக்காகத் தான ஓடோடி வந்தேன்
உன் கண்ணீர் பார்த்து
உன் கூட சேர்ந்து
ஓயாம நானு ஒப்பாரி வைத்தேன்.
-( மேகம்)